ஈழத்து இலக்கிய உலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஆசிரியை ஜெனீரா ஹைருல் அமான் குறிப்பிடத்தக்கவர்.
ஈழத்து இலக்கிய உலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஆசிரியை ஜெனீரா ஹைருல் அமான் குறிப்பிடத்தக்கவர்.
நீலப்பச்சையாய் நீளப்பரவிய
பசுமைகளின் ஆழங்களூடே
உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட
மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே
தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்
சில்லெனும் குளிரோடை மறைத்தபடி
அனல் சொரிகிறாய் Continue reading

ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்களை விட்டும்
ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது
ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.
பலவேளைகளில்
பாதப் பெருவிரல் சுரண்டுகிற
செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்
மிகச்சில பொழுதுகளில் Continue reading

கண்ணுக்குச் சற்றும் புலப்படாமல் மண்ணுக்குள் புதைந்து வாழும் மண்புழு தொட்டு கடலின் மிக ரகசியமான புதர்களில் நீந்தும் மீன் கூட்டங்கள் வரையும் நொடியில் உடையக் காத்திருப்பவைகள்தான்… எனச் சொல்லும் கவிஞர் ஜமீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பே உடையக் காத்திருத்தல்.
1993 இல் சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கும் கவிஞர் ஜெமீலின்முதல் கவிதைத்தொகுதி தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள் யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும் தடாகம் இலக்கியவட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றிருப்பது குறித்துச் சொல்லப்படவேண்டியவை.
தென்னிந்தியப் பதிப்புகளுக்கு நிகரான தளக்கோலம். பிளவுகள்நிறைந்த கற்சுவரும் குருதி கசியும் ஒற்றைவிழியோடான பெண்ணின் பாதிமுகமுமாய் கவிஞர் நவாஸ்சௌபியின் அட்டை வடிவமைப்பு தலைப்போடு வெகுவாய் ஒன்றிநிற்கிறது.
உள்ளே 60 இற்குமதிகமான கவிதைகள் எளிமையான மொழியும் பரவலான களமும் தன்னுணர்வு சார்ந்துமாய் கிழக்கின் கிராமியமணம் குன்றாமல்ஜொலிக்கின்றன. Continue reading

இன்னும் முகையவிழாத பிறை
கொஞ்சம் கொஞ்சமாய் காந்தி
திரியாகிப் பற்ற வைக்கிறது
திசைகளை
புள்ளியாய் விரியும் பெருநாள்
உலகமகா பாவிகளின்
கிழிசல்களைத் தைத்து
கந்தல்களைத் துவைத்து
பெருநாளினை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்த புனித நோன்பு நாளொன்றில் ,கரம் சேர்ந்திருந்த சகோதரர் நபீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்ட எதுவும் பேசாத மழை நாளின் மூன்றாவது கவிதையின் சில வரிகளிவை. Continue reading

இஸ்லாமிக் புக் ஹவுஸின் நேர்த்தியான புத்தக அடுக்குகளுக்குள்ளிருந்த இந்நூலினைக் கையிலெடுத்ததுமே , வானவில் சுமந்த அட்டையில் தூவானம் எனும் பெயரினைக் கண்டதும் இதுவொரு கவிதைத் தொகுதியாக இருக்குமோ என்று எண்ணித்தான் நூலைப் புரட்டினேன். ஆனாலும்அதன் முதல் பக்கத்தைப் புரட்டியதுமேஇது சகோதரி ஷாறாவின் சிந்தனைக் கட்டுரைத்தொகுதி என்பதை அறிந்து கொண்டதும், இந்நூல் தொடர்பான ஆர்வம் பன்மடங்கு அதிகமானதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
கலைப்பட்டதாரியும் ஆசிரியப்பணியில் அனுபவமுள்ளவருமான சகோதரி ஷாறா அவர்களின் எழுத்தை எனக்குப் பரிச்சயமாக்கியது அல்ஹசனாத், எங்கள்தேசம் ஆகியவைகள்தான். கவிதை, கட்டுரை, சிறுகதைகளென இடைவெளியின்றி எழுதிவரும் இவரின் முதல் நாவலான பீனிக்ஸ் பறவைகள் பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டதோடு Continue reading

‘‘லௌகீகம் வியாபித்த வாழ்வியற்தளம் தனி பொதுவாழ்வின் தரிசனங்களாய் விரிகின்றபோது நான் தரிசித்த,என்னைத் தட்டிவிட்ட நிகழ்வுகள் என் ஜீவனிலேறி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன’’ எனக் கூறும் கவிஞர் கிண்ணியா ஏ எம்.எம் அலியின் இரண்டாவது நூல்தான் ஒரு தென்னைமரம் சிறுகதைத் தொகுப்பு.
1974 இல் இலக்கிய உலகில் தடம் பதித்த கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களின் ஆக்கங்கள் தாங்கி வராத தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தேசிய சர்வதேச ரீதியில் நடாத்தப் பட்ட ஏராளமான இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் குவித்ததோடு அண்மையில் இலக்கியத்திற்கான கலாபூஷணம் அரச கௌரவத்தையும்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Continue reading

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டை அறிவியலே ஆட்டிப் படைக்கிறது. ஆட்சி செய்கிறது. இந்த நவீன உலகின் மேலைநாட்டுச் சிறுவர்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது, எமது குழந்தைகள் எத்தனை தூரம் பின்தள்ளப் பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அறிவியலுக்கான அடித்தளம் அவர்களது இளமனதில் விதைக்கப் படாததே காரணம் என்பதாலோ என்னவோ திருமதி எஸ்.பாயிஸா அலி தங்கமீன் குஞ்சுகள் மூலம்குழந்தைகள் மனதில் அறிவியலுக்கான விதைகளைத் தூவும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியையான இவர்,தனது இலக்கிய ஈடுபாட்டையும் ஆக்கத்திறனையும் ஒரு புதிய முயற்சியாகக் காட்டியிருக்கிறார்.இதுகால வரையும் குழந்தைகளுக்கான பாடல்களை மரபுக் கவிதைகளின் மறுவடிவமாகவே பார்த்திருக்கிறோம். ஆனால், Continue reading

பணத்தை எல்லோரும் மண்ணில் இருந்து தேடலாம். ஆனால் கற்பனை யில் உருவாகும் யதார்த்தங்களை எல்லோராலும் தேட முடியாதே!
மகத்தான மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவளே
இந்த இரத்த புஷ்டியுள்ள ஆக்கங்களாகும்.வானைப் பார்த்து “உருவாகும்”கற்பனைகளை விட
மண்ணில் இருந்து “உருவாகும்”யதார்த்தங்களும்
சிறப்பானவைகளேயாகும்.
“கவிஞன் பிறக்கின்றான்! அவன் செய்யப்படுபவன் அல்ல! என்பது போல!
கவிதைகளும் “செய்யப்படுபவை”அல்ல! ஆனால் கவிஞன் பிறந்து வளர்கின்றான்!
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன. என கூறும் நீங்கள்… Continue reading

கடந்த நவம்பரின் இறுதி வாரம், மிக்க அன்புடன் சோதரி பாயிஸா அலிக்கு என்ற முத்தான இருவரிகள் பதிந்த சகோதரி சுலைமா சமி இக்பால் அவர்களின் “ஊற்றை மறந்த நதிகள்” நாவல் கரங்கிட்டிய வேளை அதனைப் பிரிக்கக் கூட முடியாதளவிற்குப் பெருஞ்சுமையாய் அழுத்திக் கொண்டிருந்தது இறுதித் தவணைப் பரீட்சை விடைத்தாள் குவியல்கள்.